உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் கோவை சங்கரா கண் மருத்துவமனை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஸ்ரீமுஷ்ணம் லயன்ஸ் கிளப், நாளா கிளப், தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீமுருக விலாஸ் ஜூவல்லரி, சி.எஸ்.ஜெயின் கல்வி நிறுவனங்கள் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.முகாமிற்கு லயன்ஸ் கிளப், நாளா கிளப் தலைவர்கள் ரவிசந்திரன், நளினி தலைமை தாங்கினர்.மாவட்ட தலைவர்கள் செங்கோல், அபிராமி முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் பூவராகமூர்த்தி வரவேற்றார். கண்சிகிச்சை முகாமை, மாவட்ட தலைவர் இளையராஜா முகாமை துவக்கி வைத்தார்.சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் பூஜா தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் வேல்முருகன், ஜெயவேல், தர்மலிங்கம், ஜவகர் நாராயணசாமி, சீனு ராஜேந்திரன், வாசு ராஜேந்திரன், தலைவர் தேர்வு நிஷாந்த், செந்தில், ஜானகிராமன், இளஞ்செழியன், தனரேகா, முகாம் ஒருங்கிணைப்பாளர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில் 170 பேர் பங்கேற்றனர். 60 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, அழைத்து செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி