உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலி டாக்டர் கைது

போலி டாக்டர் கைது

திட்டக்குடி: திட்டக்குடி அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம், மேலபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் இளவரசன்,55; பிளஸ்2 வரை படித்த இவர், ஒரு வருட முதலுதவி பயிற்சியை முடித்துவிட்டு, டாக்டர் எனக்கூறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று இடைச்செருவாயில் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த இளவரசனை, திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சேபானந்தம் கையும், களவுமாக பிடித்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து இளவரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை