உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருடர்கள் மிரட்டல் அச்சத்தில் விவசாயிகள்

திருடர்கள் மிரட்டல் அச்சத்தில் விவசாயிகள்

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி மற்றும் நெய்வாசல் கிராமங்களில் கடந்த சில மாதங்களாகவே மின் மோட்டார் மற்றும் மோட்டார் ஒயர் திருட்டு அதிகளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் வயல்களுக்குச் செல்வதற்கே அச்சப்படுகின்றனர்.விவசாயிகள் நெல், கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்களும் அழிந்துவிடும் அவலநிலை நிலவுகிறது. சில நாட்களுக்கு முன்பு வெள்ளாற்றங்கரையில் சில இளைஞர்கள், மோட்டார் ஒயரை எரித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த விவசாயி ஒருவர் அதைப்பார்த்ததும், அந்த இளைஞர்கள் தப்பியோடினர்.அதில் அடையாளம் தெரிந்த இளைஞர் பற்றி, அவரது உறவினர் ஒருவரிடம் புகார் தெரிவித்தார். இதையறிந்த அந்த இளைஞர், மறுநாள் அந்த விவசாயியை சந்தித்து மிரட்டியுள்ளார். இதில் பயந்துபோன விவசாயிகள் மோட்டார் ஒயர் திருட்டு குறித்து புகார் தெரிவிக்க அஞ்சுகின்றனர். சிலர் மட்டும் ஆவினங்குடி போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை