உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூறைக் காற்றால் சேதமான வாழை பயிர் நிவாரணம் இன்றி தவிக்கும் விவசாயிகள்

சூறைக் காற்றால் சேதமான வாழை பயிர் நிவாரணம் இன்றி தவிக்கும் விவசாயிகள்

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடியில் சூறைக்காற்றில் சேதமான வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதி கிராமங்களான வழுதலம்பட்டு, சமட்டிக்குப்பம், புலியூர், உள்ளிட்ட பல கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளது. இந்த கிராமங்களில் இருந்து பல மாநிலங்களுக்கு வாழைபழம், வாழை இலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, ஜூன் மாதம், 4ம் தேதி, நள்ளிரவு சூறைக்காற்றுடன் திடீர் மழை பெய்தது. இதில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன. மீதமிருந்த வாழை மரங்களும் குலை தள்ளாமல் அழிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.வாழை பயிரிட ஏக்கருக்கு 1.5 லட்சம் ரூபாய் செலவானதால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர்.குள்ளஞ்சாவடி பகுதியில் மொத்தம் 72.45 ஏக்கரில், 167 விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால் இதுவரை இந்த விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படவில்லை. இதன்பின் பெஞ்சல் புயல் காரணமாக நெல், மணிலா பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தற்போது நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. பெஞ்சலுக்கு முன்பு பாதிப்படைந்த வாழை விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என, குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ