டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் ஐவர் படுகாயம்
எலவனாசூர்கோட்டை; கடலுார் மாவட்டம், பூவனுாரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 25. இவர், தன் ஊரிலிருந்து டிராக்டரில் விறகு கட்டைகளை ஏற்றிக்கொண்டு, சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி சென்றார்.நேற்று காலை 5:30 மணியளவில் பரமேஸ்வரிமங்கலம் பகுதியில் சென்றபோது, செம்மனங்கூர் கிராமம், அர்ஜுனன், 29, ஓட்டி வந்த 108 ஆம்புலன்ஸ், டிராக்டர் மீது மோதியது.அர்ஜுனன், ஆம்புலன்சில் பயணித்த மருத்துவ டெக்னீஷியன் காயத்ரி, 32, விஷம் குடித்து சிகிச்சைக்காக சென்ற கூ.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த செல்வகுமார், 25, உடன் சென்ற அவரது தாய் லட்சுமி, 55, மற்றும் டிராக்டர் ஓட்டுநர் ஏழுமலை ஆகியோர் படுகாயமடைந்து, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.