| ADDED : ஜூன் 26, 2024 03:07 AM
கடலுார் : கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் மணிதேவன் தலைமை தாங்கினார். அறிவழகன், குணசேகரன், தணிகாசலம், ஜெயந்தி, பாலசுந்தரி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் குணா துவக்க உரையையும், மாவட்ட செயலாளர் ரங்கசாமி விளக்க உரையும் ஆற்றினர்.அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாலசுப்ரமணியன், ராஜேந்திரன், நடராஜன், ரங்கநான், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி வாழ்த்திப் பேசினர். மாநில துணைத் தலைவர் அபராஜிதன் நிறைவுரையாற்றினார்.சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் 6,750 ரூபாய் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.