மேலும் செய்திகள்
கந்தலான விலங்கல்பட்டு சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
9 hour(s) ago
சைவத் திருமுறை பயிற்சி நிறைவு விழா
9 hour(s) ago
நியூ கிருஷ்ணா பேக்கரி திறப்பு
9 hour(s) ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் வெடி குண்டு வெடிப்பது போல் இரண்டாம் நாளாக சத்தம் கேட்டதால் வீட்டிலிருந்த மக்கள் அலறி அடித்து தெருவுக்கு ஓடி வந்தனர்.நெல்லிக்குப்பத்தில் நேற்று முன்தினம் இரவு 8.40 மணிக்கு குண்டு வெடிப்பது போல் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பூகம்பம் ஏற்பட்டடதா அல்லது ஹெலிகாப்டர் ஏதாவது கீழே விழுந்ததோ என தெரியாமல் அச்சத்தில் வீட்டில் இருந்து அலறி அடித்து கொண்டு தெருவுக்கு ஓடிவந்தனர்.இந்த சத்தம் நகர பகுதி முழுவதும் கேட்டுள்ளது.3 நிமிடத்துக்கு பிறகு அந்த சத்தம் நின்றது. நேற்று மதியம் 12.45 மணிக்கும் தொடர்ந்து மதியம் 2.35 மணிக்கும் இந்த சத்தம் தொடர்ந்து 5 நிமிடத்துக்கு மேல் கேட்டது.ஈ.ஐ.டி., சர்க்கரை ஆலையில் இருந்தே இந்த சத்தம் வந்துள்ளதை அறிந்து மக்கள் வீடுகளுக்குள் சென்றனர்.இதுபற்றி விசாரித்ததில் சர்க்கரை ஆலையில் உள்ள டிஸ்ட்டிலரியில் புதியதாக இயந்திரங்கள் அமைக்கும் பணி முடிந்து சோதனை ஓட்டம் நடத்தியபோது தான் சத்தம் வந்ததால் இயந்திரத்தை நிறுத்தி சரி செய்யும் பணியை செய்து வருகின்றனர்.இதனால் நகரம் முழுவதும் மக்களிடம் பதட்டம் நிலவியது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago