உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காய்கறி மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் குவிந்து சீர்கேடு

காய்கறி மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் குவிந்து சீர்கேடு

விருத்தாசலம், : விருத்தாசலம் நகராட்சி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும்.விருத்தாசலம் நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் நுாற்றுக்கணக்கான காய்கறி, மளிகை, முட்டை, வாழை இலை கடைகள் இயங்கி வருகின்றன.இங்கிருந்து தினசரி வெளியேற்றப்படும் கழிவுகள், மார்க்கெட் வாசலில் குவித்து வைக்கப்படும். இவற்றை நகராட்சி துாய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு, மக்கும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது.இந்நிலையில், காய்கறி மார்க்கெட் வளாகத்தில் நேற்று மாலை வரை கழிவுகள் அகற்றப்படாமல் குவிந்து கிடந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் வியாபாளிகள், பொது மக்கள் சிரமமடைந்தனர். மேலும், சமீபத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது, குவிந்த கழிவுகளும் கிடக்கின்றன. எனவே, தினசரி காய்கறி கழிவுகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ