உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் வாயிற்கூட்டம்

அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் வாயிற்கூட்டம்

கடலுார் : கடலுார் மாவட்ட அரசு போக்குவரத்து கழக தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடந்தது.கடலுார் போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு நடந்த கூட்டத்திற்கு, துணைத் தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். தலைவர் வேல்முருகன், பொருளாளர் உதயகுமார், கவுரவ தலைவர் பாஸ்கரன், துணை பொதுச் செயலாளர் ஜான்டேவிட், துணைத் தலைவர்கள் குமார், சந்திரன் முன்னிலை வகித்தனர். பிரசார செயலாளர் வசந்த்குமார் வரவேற்றார். துணை பொதுச் செயலாளர் சபரிகிரி கோரிக்கை உரையாற்றினார். பேரவை செய்தி தொடர்பாளர் முத்து சரவணன், வாயிற்கூட்ட உரையாற்றினார்.மதுரை மண்டல பொதுச் செயலாளர் ரகுராமன், கோவை மண்டல தலைவர் கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர். தொழில்நுட்ப பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பூதலிங்கம் சிறப்புரையாற்றினார். இதில், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும். போக்குவரத்து பணியாளர்களை அரசு ஊழியராக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.துணை பொதுச் செயலாளர் சுந்தரவடிவேலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி