உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் குறைதீர் முகாம்

சிதம்பரத்தில் குறைதீர் முகாம்

சிதம்பரம் : சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில், பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளித்தனர்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அத்துடன், கோட்ட அளவில் சப் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமைகளில் பொதுமக்களிடம் குறைகள் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டு, மனுக்கள் பெறப்படுகிறது.அந்த வகையில், நேற்று சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணியிடம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்ற சப் கலெக்டர், மேல் நடவடிக்கைக்கு அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.இதில் சிதம்பரம் வருவாய் உட்கோட்ட பகுதிகளான சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீ முஷ்ணம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேரடியாக தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இளநிலை வருவாய் ஆய்வாளர்வேல்முருகன், சிதம்பரம் நகர வருவாய் ஆய்வாளர்நாகேந்திரன் மற்றும் அனைத்து பகுதி வருவாய் ஆய்வாளர் குகன்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை