உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம்

கடலுார்: லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறை முடிவுற்றதை தொடர்ந்து, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர குறைகேட்பு கூட்டம் நடந்தது.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் தேவைகள், புகார்கள் குறித்து மனுக்கள் கொடுத்து பயன்பெற்று வருகின்றனர்.இந்நிலையில், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ம் தேதி நடந்தது. இதற்கான நடத்தை விதிமுறை மார்ச் 16ம் தேதி முதல் அமலுக்கு வந்ததால், கடலுாரில வாராந்திர குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. பொதுமக்கள் தங்களின் மனுக்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்திருந்த புகார் பெட்டியில் போட்டனர்.தற்போது லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறை முடிவுற்றது. இதை தொடர்ந்து, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ