உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாப்பிள்ளை விஷ்ணு பிரசாத் மண்டபம் மாறி வந்துவிட்டார் அன்புமணி பேச்சு

மாப்பிள்ளை விஷ்ணு பிரசாத் மண்டபம் மாறி வந்துவிட்டார் அன்புமணி பேச்சு

கடலுார்: மாப்பிள்ளையான விஷ்ணுபிரசாத், ஆரணி திருமண மண்டபத்திற்கு செல்லாமல், மாறி கடலுார் திருமண மண்டபத்திற்கு வந்துவிட்டதாக பா.ம.க., அன்புமணி பேசினார்.கடலுாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி பேசியதாவது:கடலுார் லோக்சபா தொகுதி காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத், கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் மாப்பிள்ளை நான்தான். ஆனால், சட்டை அவருடையது என அமைச்சர் பன்னீர்செல்வத்தை பார்த்து கூறினார். அமைச்சர் தனது மகனுக்கு சட்டை வாங்கித் தர நினைத்தார் முடியவில்லை.தங்கர்பச்சான்தான் கடலுார் தொகுதியின் உண்மையான மாப்பிள்ளை. விஷ்ணு பிரசாத், ஆரணி திருமண மண்டபத்திற்கு செல்லாமல் மாறி கடலுார் திருமண மண்டபத்திற்கு வந்து விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ