உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்ட மைய நுாலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி 

மாவட்ட மைய நுாலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி 

கடலுார்; மாவட்ட மைய நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்பு நாளை துவங்குகிறது.மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) முருகன் செய்திக்குறிப்பு;கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் செயல்படும் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்பு நாளை 15ம் தேதி துவங்குகிறது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைக்கிறார். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ