உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே டி.வி.எஸ்., மொபட்டில் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் கடத்தி சென்றவரை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டியில் இருந்து குத்தாப்பாளையம் செல்லும் சாலையில் நேற்று சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டி.வி.எஸ்., மொபட்டை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மூட்டையில் 2,250 ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர். அதையெடுத்து, ஹான்ஸ் மற்றும் மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும்.இதுகுறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, கடத்திச்சென்ற பரங்கிப்பேட்டை மண்டப தெருவை சேர்ந்த செந்தில்குமாரை, 55; கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ