உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்பனை வியாபாரி கைது

குட்கா விற்பனை வியாபாரி கைது

புதுச்சத்திரம், : குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மளிகை கடைகாரரை போலீசார் கைது செய்தனர். புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உமர்கான், 60; இவர் பெரியப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் மளிகை கடை வைத்துள்ளார். இவர், தனது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் மொத்தம் 660 குட்கா பாக்கெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து உமர்கானை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை