உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுத்திறனாளிகள் சங்க செயற்குழு கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் சங்க செயற்குழு கூட்டம்

விருத்தாசலம் : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட குழு உறுப்பினர் சாமிதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆளவந்தார், மாநில குழு ரவீந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் விமலா, கருப்பையன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில தலைவர் வில்சன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், புதிதாக உதவித்தொகை வழங்க வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். நுாறுநாள் வேலை திட்டத்தில் பணி வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !