| ADDED : ஆக 11, 2024 04:42 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே சாலையில் கிடந்த பர்சை போலீசில் ஒப்படைத்த வாலிபரை, இன்ஸ்பெக்டர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ம.குன்னத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் மகன் கார்த்திகேயன், 34. இவர், நேற்று விருத்தாசலத்தில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோ.பூவனுார் சாலையில் மணி பர்ஸ் கீழே கிடந்தது. அதில், ரூ.4 ஆயிரம் பணம் இருந்தது. அந்த பர்சை, மங்கலம்பேட்டை போலீசில் கார்த்திகேயன் ஒப்படைத்தார்.போலீசார் அவரை, பாராட்டி வெகுமதி வழங்கினர். பின்னர் அந்த பர்ஸ், விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கிருண்மூர்த்தி மகன் வீரா தவறவிட்டது தெரியவந்து, போலீசார் ஒப்படைத்தனர்.