உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொசு உற்பத்தி தடுக்க சுகாதாரத்துறை தீவிரம்

கொசு உற்பத்தி தடுக்க சுகாதாரத்துறை தீவிரம்

மந்தாரக்குப்பம் : பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.மாவட்டத்தில் அடுத்தடுத்து மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு சளி, இருமல் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைநீரில் ஆங்காங்கே தேங்கி நின்று அதன் வாயிலாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு வராமல் தடுக்க, வீடுகளில் அருகில் டயர், உரல், பிளாஸ்டிக் டிரம் உள்ளிட்டவற்றில் மழை நீர் தேங்கமால் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும், காய்ச்சிய நீரை பருக வேண்டும். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அருண்ராஜ் தெரிவித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை