உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் சுகாதாரத் துறை துணை இயக்குனர் அலுவலகம் எதிரில் பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் நாட்டுதுரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சங்கர், ரிச்சர்டு எட்வின்ராஜ், உமாபதி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அன்பரசன் விளக்க உரையாற்றினார்.மாநில துணைத் தலைவர் அருண்குமார் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் வெங்கடேசன், அரிகிருஷ்ணன், பாலசுப்ரமணியன், மணிமேகலை உட்பட பலர் பங்கேற்றனர்.கொரோனா காலத்திலும், மக்களை தேடி மருத்துவத்திலும் பணிபுரிந்த, பணிபுரியும் ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பொருளாளர் கவியரங்கன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை