உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 40 பேர் கைது

கடலுாரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 40 பேர் கைது

கடலுார்: கடலுாரில் கோவிலை சீரழிக்கும் மாநில அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்ட இந்து முன்னணி சார்பில் இந்து கோவில்களை சீழிக்கும் மாநில அரசைக் கண்டித்தும், கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகி சக்திவேல் தலைமை தாங்கினார். தண்டபாணி வரவேற்றார். மாவட்ட நிர்வாகி வேல்முருகன் கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சியில் பா.ஜ., நிர்வாகிகள் மணிகண்டன், வெங்கடேசன், இந்து முன்னணி நிர்வாகிகள் பெருமாள், ரவிச்சந்திரன், மூரத்தி, ரவி, தனஞ்செழியன், கிருஷ்ணன், ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன் அனுமதி பெறவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த 40 பேரை கைது செய்து, சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி