உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராபின், 29. இவரது மனைவி இன்பென்டா, 28. இருவருக்கும் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.ராபின் பெற்றோர் இன்பென்டாவை வரதட்சணை கேட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்தனர். இதன்காரணமாக, அவர் கொக்காம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இன்பென்டா தனது கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது, ராபின் மற்றும் அவரது பெற்றோர்கள் இன்பென்டாவை அசிங்கமாக திட்டி, தாக்கினர்.இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, ராபினை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ