உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் தற்கொலை; மனைவி புகார் 

கணவர் தற்கொலை; மனைவி புகார் 

பெண்ணாடம்; குடும்ப பிரச்னையில் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணாடம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா, 37. இவரது மனைவி ஜான்பேகம், 30. ஒரு மகள் உள்ளார். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதில் ஜான்பேகம் அருகிலுள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.ஜான்பாஷா வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த ஜான்பேகம் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் சாதிக்பாஷாவை மீட்டு பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை