| ADDED : ஜூன் 18, 2024 05:45 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சியில் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை இணைக்க வலியுறுத்தி, பொதுநல அமைப்புகள் சார்பில் அமைச்சர் கணேசனிடம் மனு கொடுத்தனர்.மாவட்டத்தில் குடிநீர் தடுப்பாட்டை போக்கும் வகையில் என்.எல்.சி., உபரிநீரை சுத்திகரித்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் சுகாதாரமான குடிநீர் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.இப்பணியில், விருத்தாசலம் நகராட்சியை இணைக்கக் கோரி, வர்த்தகர்கள் சங்க கவுரவ தலைவர் அகர் சந்த் தலைமையில் பொது நல அமைப்புகள் இணைந்து, அமைச்சர் கணேசன், விஷ்ணு பிரசாத் எம்.பி., ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தனர்.அப்போது, விருத்தாசலம் புறவழிச்சாலை வழியாக செல்லும் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், விருத்தாலசம் நகராட்சி மக்கள் நலன் கருதி குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.அதற்கு, இது தொடர்பான கோரிக்கை எழுந்த தகவலறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.