உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அதிகாரிகள் நடத்திய கூட்டாய்வில், தனியார் பள்ளிகளின் 43 வாகனங்களுக்கு அனுமதி மறுத்து, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் பகுதிகளில் இயங்கும் 33 தனியார் பள்ளிகளின் வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன.வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி வாகனங்களில் பிரேக், ஹாரன், முகப்பு விளக்கு, இன்டிகேட்டர், வேக கட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி, இருக்கைகள், படிக்கட்டுகள், வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை சோதனை செய்தனர்.33 பள்ளிகளில் இயங்கும் 419 வாகனங்களில், நேற்று 283 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. அதில், 43 வாகனங்களில் தீத்தடுப்பு சாதனம், சி.சி.டி.வி., உள்ளிட்ட பழுதுகளை சரிசெய்து வரக் கூறிய அதிகாரிகள், அவற்றை திருப்பி அனுப்பி வைத்தனர். மீதமுள்ள 240 வாகனங்களுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் கூறுகையில், '283 வாகனங்கள் நேற்றைய ஆய்வில் சோதனை செய்தோம். 43 வாகனங்கள் பல்வேறு குறைபாடுகள் காரணமாக ரிஜெக்ட் செய்யப்பட்டுள்ளன.மீதமுள்ள வாகனங்களை பெரியவடவாடியில் உள்ள அலுவலகத்தில் தினசரி ஆய்வு செய்யப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பதற்குள் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்து முடிக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ