உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மைசூர் எக்ஸ்பிரஸ் கடலுார் வரை நீட்டிப்பு; ரயில் நிலையத்தில் கட்டமைப்பு பணிகள் தீவிரம்

மைசூர் எக்ஸ்பிரஸ் கடலுார் வரை நீட்டிப்பு; ரயில் நிலையத்தில் கட்டமைப்பு பணிகள் தீவிரம்

கடலுார் : மைசூர் விரைவு ரயில் கடலுார் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட உள்ளதால், துறைமுக ரயில் நிலைய சந்திப்பில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கடலுார் துறைமுகம் ரயில் நிலைய சந்திப்பு, ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சென்னை எழும்பூர்- விழுப்புரம்- தஞ்சாவூர் மெயின் லைன் ரயில் பாதையாக உள்ளது. இதன் வழியாக சோழன் எக்ஸ்பிரஸ், திருச்சி, திருச்செந்துார், ராமேஸ்வரம், மயிலாடுதுறை, காரைக்கால்-பெங்களூர், காரைக்குடி என 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது.தொழிற்சாலைகள் நிறைந்த கடலுாரில் இருந்து கோயம்புத்துார், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு போதிய ரயில் வசதி இல்லாததால், மயிலாடுதுறை-மைசூர் எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை - கோவை ஜென்சகாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களை கடலுார் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.அதனையேற்ற தெற்கு ரயி்ல்வே நிர்வாகம், தற்போது முதற்கட்டமாக மயிலாடுதுறை-மைசூர் (16231/16232) எக்ஸ்பிரஸ் ரயில் கடலுார் துறைமுகம் வரை நீட்டித்துள்ளது. இந்த ரயில், இம்மாத இறுதி வாரத்தில் இருந்து இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அதனையொட்டி, கடலுார் துறைமுக ரயில் நிலைய முனையத்தை தரம் உயர்த்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதில், ரயில்கள் தண்ணீர் பிடிக்கும் வசதி, ரயில்வே டிரைவர், கார்டு தங்கும் விடுதி, ரயில் பெல்ட், எலக்ட்ரிக் மற்றும் பேட்டரி சரி பார்த்தல், ரயில் கேரேஜ் இணைப்புகள் சரி பார்த்தல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் துவக்கப்படுகிறது.ரயில் நிலையத்தில் 24 கேரேஜ் தண்ணீர் பிடிக்கும் வகையில் 600 மீட்டர் துாரத்திற்கு பைப் லைன்கள், பொறியியல் பிரிவு கட்டமைப்புகள் பணிகள் நடக்கிறது. இதனால் கடலுார் துறைமுகம் ரயில் நிலையம் பொலிவு பெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை