உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூ தாட்டி சாவில் சந்தேகம் இருவரிடம் விசாரணை

மூ தாட்டி சாவில் சந்தேகம் இருவரிடம் விசாரணை

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மூதாட்டி இறந்தது தொடர்பாக இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த காட்டுப் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாரங்கபாணி. இவரது மனைவி லட்சுமி,75; சாரங்கபாணி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுடைய மகள் இந்திராணி, 50, திருமணம் ஆகி அதே ஊரில் கணவரோடு வசிக்கிறார். லட்சுமி தனியாக வசித்ததார்.இந்நிலையில் இந்திராணியின் சித்தப்பா பாண்டுரங்கன் என்பவர் கடந்த 24ம் தேதி இந்திராணிக்கு போன் செய்து லட்சுமி கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.இந்திராணி சென்று பார்த்தபோது, லட்சுமி நெற்றியில் காயம் இருந்தது. அவர் அணிந்திருந்த தோடு காணவில்லை. தனது தாய் சாவில் சந்தேகம் உள்ளதாக இந்திராணி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின் பேரில், இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி