உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், ஒன்றி யங்களில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை சிறப்பாக செயல் படுத்திய, தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாநில சமச்சீர் நிதியின் கீழ், பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.காட்டுமன்னார்கோவில் கலைமகள் உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கினார். கடலுார் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுகப்பிரியா, விருத்தாசலம் கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயச்சந்திரன் சான்றிதழ் வழங்கினர்.வட்டார கல்வி அலுவலர்கள் ராமதாஸ், இந்திரா, மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவசேனா, மேற்பார்வையாளர் அருள்சங்கு, ஆசிரிய பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பாசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ