உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜமாபந்தி ஆலோசனை கூட்டம்

ஜமாபந்தி ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் வட்டத்தில் இன்று (11ம் தேதி) முதல் ஜமாபந்தி நடக்கிறது. இதையொட்டி, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, தாசில்தார் உதயகுமார் தலைமை தாங்கினார். துணை தாசில்தார்கள், தாலுகா அலுவலக பணியாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். இணைய வழியில் பெறப்படும் சான்றுகள், பட்டா மாற்றம் தொடர்பாக வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள், குறுவட்ட நில அளவர்கள், மண்டல துணை தாசில்தார் ஆகியோர் அலுவலகங்களில் விசாரணை மேற்கொள்ளாமல், மனுதாரரின் குடியிருப்பு பகுதிக்கு சென்று அல்லது மறைமுக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.மேலும், ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது, அரசுக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் பொதுமக்களிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை