உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அழகுமுத்துகோன் 267வது குருபூஜை விழா

அழகுமுத்துகோன் 267வது குருபூஜை விழா

கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட யாதவ் மகா சபை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் 267வது குருபூஜை விழா நடந்தது.கடலுார், புதுப்பாளையம் துர்கா தனிப்பயிற்சி கல்லுாரியில் நடந்த விழாவில் யாதவ் மகா சபை கிழக்கு மாவட்டத் தலைவர் மனோகரன், செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் தலைமை தாங்கி, அழகுமுத்துகோன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தார்.விழாவில், தெற்கு ஒன்றிய செயலாளர் ஏழுமலை, திருக்குமரன், சிவக்குமார், கோதண்டராமன், சதீஷ்ராஜ், அன்பழகன், சூரியமூர்த்தி, செல்வராஜ் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். நகர பொருளாளர் மகேஷ்பாபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ