காட்டுமன்னார்கோவிலில் தீ விபத்து ரூ. 15 லட்சம் சேதம்
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில், தீ விபத்தில் இரு ஓட்டல்கள் எரிந்ததில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் மெயின்ரோட்டில் செல்வம், பிரபு ஆகியோர் தனித்தனியாக ஓட்டல் நடத்தி வருகின்றனர். செல்வம் தனது ஓட்டலை சில நாட்களாக திறக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வம், பிரபு ஆகிய இருவரின் கடைகளும் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது.தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்க முயன்றனர்.முடியாததால், குமராட்சி மற்றும் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, 3 தீயணைப்பு நிலைய வீரர்களும் ஒன்றிணைந்து, தீயை அனைத்தனர்.தீ விபத்தில் இரு ஓட்டல்களும் முற்றிலும் எரிந்து, பொருட்கள் முழுவதும் சேதமானது. சேத மதிப்பு ரூ. 15 லட்சம் என, கணக்கிடப்பட்டுள்ளது.ஓட்டல்கள் அருகே இருந்த சண்முகம் என்பரது வீட்டில் தீ பரவியதால் அவரது வீட்டின் ஒரு பகுதி எரிந்து பொருட்கள் சேதமானது. விபத்துக்கான காரணம் குறித்து, காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.