| ADDED : மே 12, 2024 05:32 AM
பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 98 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.பள்ளி அளவில் மாணவி லாவண்யா 489 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவன் சுதர்சனன் 488 பெற்று 2 ம் இடம், வைஷ்ணவி 485 பெற்று 3ம் இடம் பிடித்தனர்.மாணவி கோபிகா 481 மதிப்பெண், தையல்நாயகி, சகீனாபேகம் இருவரும் 477 மதிப்பெண் பெற்றுள்ளனர்.450 மதிப்பெண்ணிற்கு மேல் 12 பேர், 40௦க்கு மேல் 35 பேர் பெற்றனர்.கணித பாடத்தில் ௪ மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களும், மொழிப்படங்களில் இரு மாணவிகள் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்றனர்.பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றிக்கு உதவிய ஆசிரியர்களை பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன், தாளாளர் ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ரவி, இயக்குனர்கள் தேவநாதன்,பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.