உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

தமிழில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பகுதி அரசு பள்ளிகளில், பொதுத்தேர்வில் தமிழில் அதிக மதிப்பெண் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.சேத்தியாத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்மன்ற நிறுவனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். தமிழ்மன்ற நிதி அறங்காவலர் தாமரைச்செல்வன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன், மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினார்.தமிழ்மன்ற நிர்வாக அறங்காவலர் ஜெயந்திஆனந்தன் தமிழ்மொழியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். விழாவில, மஞ்சக்கொல்லை, பின்னலுார், எறும்பூர், சேத்தியாத்தோப்பு, மழவராயநல்லுார், புடையூர் ஆகிய 6 அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர், தமிழில் சிறப்பிடம் பெற்றவர்கள் பாராட்டப்பட்டனர்.ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், கோபிநாதன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை