உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கு அனுமதி முதல்வருக்கு குலாளர் மக்கள் இயக்கம் நன்றி

ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கு அனுமதி முதல்வருக்கு குலாளர் மக்கள் இயக்கம் நன்றி

சேத்தியாத்தோப்பு: மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரி, குளங்கள், கண்மாய்களில் மண் எடுக்க அரசாணை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு குலாளர் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில் மண்பாண்டங்கள் செய்யும் குயவர்கள், குலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் என பல லட்சம் மக்கள் உள்ளனர். மண்பாண்டங்கள் செய்வதற்கு கடந்த காலங்களில் ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கு அரசு விதிமுறைகளால் கடும் அவதியடைந்து வந்தோம்.மண்பாண்ட தொழிலாளர்கள், குயவர்கள், குலாளர் மக்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் ஏரிகள். குளங்கள், கண்மாய்கள், நீர்த்தேக்கங்கள், கல்வாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் களிமண், வண்டல் மண் பணம் இல்லாமல் எடுப்பதற்கு தாங்கள் உத்தரவிட்டுள்ளீர்கள்.இதுன் மூலம் மண்பாண்ட தொழிலாளர்கள், குயவர்கள், குலாளர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்தற்கு அனைத்து குலாளர் மக்கள் இயக்கம், திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி