உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வள்ளலார் கோவிலில் கும்பாபிஷேகம்

வள்ளலார் கோவிலில் கும்பாபிஷேகம்

புவனகிரி: புவனகிரி அடுத்த கிருஷ்ணாபுரம் வள்ளலார் ஜோதி நிலையத்தின் நிறுவப்பட்ட கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு அகவல் பாராயணம் மற்றும் முதல் யாகசாலை பூஜை துவங்கியது. மாலை திருவருட்பாவை புதுவை அன்னபூரணி மற்றும் சதாசிவம் முற்றோதல் நிகழ்த்தினர்.நேற்று காலை 6:30 மணியளவில் அகவல் பாராயணம், காலை 8:00 மணிக்கு சன்மார்க்கக் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. 9:15 மணி முதல் 10:15 மணிக்குள் சக்தி வளாகம் மேட்டுக்குப்பம் கோவை சிவப்பிரகாஷ் சுவாமிகள் தலைமையில் கும்பாபிேஷகம் நடந்து.விழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிருஷ்ணாபுரம் வள்ளலார் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை