உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அவதுாத சுவாமிகள் அதிஷ்டான கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

அவதுாத சுவாமிகள் அதிஷ்டான கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

சிதம்பரம்: சிதம்பரம் குருஐயர் தெருவில் உள்ள ஸ்ரீலஸ்ரீ அவதுாத சுவாமிகள் அதிஷ்டானம் திருப்பணி செய்யப்பட்டு இன்று காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.அவதுாதம் என்பது துறவறத்தில் ஒரு நிலையாகும். சிதம்பரத்தில் தவம் புரிந்து, சமாதி அடைந்து, மக்களுக்கு அருள் புரிந்து வருபவர், அவதுாத சுவாமிகளின் பிரதான சீடரான, அமரர் ஸ்ரீ சிந்தாலய ஈசன் சுவாமிகள், கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், போத்தங்கோடு, கள்ளிக்காடு, நெய்யாத்தங்கரை ஆகிய இடங்களில் குருவான அவதுாத சுவாமிகளுக்கு ஆசிரமங்கள் அமைத்து, அங்கு தினமும் பிரார்த்தனை, பூஜை, ஆராதனை நடந்து வருகிறது. சிதம்பரத்தில் உள்ள அவதுாத சுவாமிகள் அதிஷ்டானத்தில் தினமும் இருவேளை அபிஷேகம் மற்றும் பூஜைகளும், மாதம் தோறும் பெளர்ணமி பூஜையும், அன்னதானமும் நடக்கிறது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏப்.19-ம் தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது. 20-ம் தேதி காலை பூர்வாங்க பூஜைகளும் நேற்று கடஸ்தாபனம் செய்யப்பட்டு முதல்கால யாக பூஜை துவங்கியது. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும் பின்னர் கடயாத்ராதானம் புறப்பாடு நடக்கிறது. பின்னர் காலை 9 மணிக்கு மேல் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை அதிஷ்டான ஆலய நிர்வாகிகள் சசிதரன்நாயர், வழக்கறிஞர்கள் ராமச்சந்திரன், ராமதாஸ், தோப்பு சுந்தர், பொன்அழகப்பன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி