உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலை முயற்சி வழக்கு வாலிபருக்கு குண்டாஸ்

கொலை முயற்சி வழக்கு வாலிபருக்கு குண்டாஸ்

கடலுார்: முன்விரோத தகராறில் ஒருவரை கத்தியால் வெட்டி கொல்ல முயன்ற வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம், கர்ணத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு,45; இவரை, கடந்த 2ம் தேதி, கர்ணத்தம் பஸ் நிறுத்தம் அருகில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சந்துரு (எ) கோகுல்,20; சக்திவேல், ராதா ஆகியோர் 3 பேர் கத்தியால் வெட்டி கொல்ல முயன்றனர். புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சந்துரு உட்பட 3 பேரை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். சந்துருவின் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ராஜாராம், கலெக்டர் அருண் தம்புராஜிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டரின் உத்தரவையேற்று, கடலுார் மத்திய சிறையில் சந்துருவிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ