| ADDED : ஜூன் 01, 2024 04:17 AM
நெய்வேலி திருட்டு வழக்கில் தொடர்புடைய இலங்கை அகதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். குறிஞ்சிப்பாடி, இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் குணரத்தினம் மகன் ரிஷி (எ) ரதுஷன், 24; இவர், நெய்வேலி இந்திரா நகர் கடை தெருவில் கடைகளை உடைத்து பொருட்களை திருடிச் சென்றதாக நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப் பதிந்து ரிஷியை கைது செய்தார்.இவர் மீது திருட்டு வழக்குகள் உள்ளது. இவரின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ராஜாராம், கலெக்டர் அருண் தம்புராஜிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்படி சென்னை புழல் சிறையில் உள்ள ரிஷியிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினர்.