உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: மூன்று குற்றவியல் சட்டங்களை மாற்றி அமைத்ததை கண்டித்து,விருத்தாசலம் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு, மூத்த வழக்கறிஞர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். விருதை பார் அசோசியேஷன் சங்க தலைவர் விஜயகுமார், அட்வகேட் அசோசியேசன் சங்கதலைவர் சதீஷ்குமார், பார் அசோசியேஷன் சங்கதலைவர் சாவித்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வழக்கறிஞர்கள் சந்திரசேகர், புஷ்பதேவன், செல்வபாரதி, பழனிமுத்து, குமரகுரு, ராஜா, காசிவிஸ்வநாதன், சங்கர்கணேஷ், சுரேஷ், ரமேஷ், சரவணன், அசோக்குமார், ராஜ்மோகன், பெண் வழக்கறிஞர்கள் ஜென்னி, செல்வி, பத்மப்பிரியா, காயத்ரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதில், இந்திய தண்டனை சட்டங்களை மாற்றி அமைத்ததை கண்டித்தும், மாற்றி அமைக்கப்பட்ட மூன்று சட்டங்களை திரும்ப கொண்டு வர வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ