உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று காலை, பெரியகுமட்டி பைபாஸ் சாலையில் ரோந்து சென்றனர். அங்கு, வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்த பூவாலை குளத்துமேட்டு தெருவை சேர்ந்த ஆறுமுகம், 46; என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, கேரளா மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ