உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வரத்து குறைவு மீன்கள் விலை கிடு கிடு

வரத்து குறைவு மீன்கள் விலை கிடு கிடு

கடலுார்: கடலுார் துறைமுகத்தில் ஆடி அமாவாசை மற்றும் மீன்கள் வரத்து குறைவால் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.கடலுார் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் பைபர் மற்றும் விசைப் படகுகள் மூலமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். மீனவர்கள் கொண்டு வரும் மீன்கள் கடலுார் துறைமுகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் ஏராளமான மக்கள் மீன்கள் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக, ஞாயிற்று கிழமைகளில் மக்கள் அதிகளவில் காணப்படும்.ஞாயிற்று கிழமையான நேற்று மீன்களின் வரத்து வழக்கத்தை விட குறைவாகவேஇருந்தது. மேலும், ஆடி அமாவாசை என்பதால் வழக்கத்தை விட குறைந்தளவு மக்களே மீன்களை வாங்க வந்தனர்.வரத்து குறைவால் மீன்களின் விலையும் அதிகமாக இருந்தது. வஞ்சிரம் ஒரு கிலோ 700 முதல் 900 ரூபாய் வரை விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ