உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மங்கலம்பேட்டை பேரூராட்சி கூட்டம்

மங்கலம்பேட்டை பேரூராட்சி கூட்டம்

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை பேரூராட்சி சாதாரண கூட்டம், பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மயில்வாகனன் முன்னிலை வகித்தார். துணைச் சேர்மன் தாமோதரன் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:செம்பருத்தி நகர், அண்ணா நகர், மாருதி நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, இந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். பேரூராட்சி கூட்டம் மாதம் தோறும் நடத்த வேண்டும்.வார்டு பகுதிகளில் நடக்கும் பணிகள் குறித்து, ஒப்பந்ததாரர்கள் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை. 3வது வார்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதையுடன் கால்வாய் அமைக்க வேண்டும். வாணியர் வீதியில் மினி குடிநீர் டேங்க் அமைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.தொடர்ந்து செயல் அலுவலர் பதில் அளித்து பேசுகையில், 'கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.கூட்டத்தில், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரங்க ராமானுஜம், பொருத்துனர் கோவிந்தராஜூலு, துப்புரவு மேற்பார்வையாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை