| ADDED : ஜூலை 20, 2024 05:25 AM
கடலுார்: ம.தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்டம் குறிஞ்சிப்பாடி (கி) ஒன்றியம் சார்பில், கட்சியின் 31வது ஆண்டு துவக்க விழா, லோக்சபா தேர்தல் வெற்றி விழா, மரக்கன்று வழங்கும் விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது.குறிஞ்சிப்பாடி கோதண்டராமாபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி (கி) ஒன்றிய துணை செயலாளர் ரங்கபாஷியம் தலைமை தாங்கினார். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சிவக்குமார் வரவேற்றார். ராமாபுரம் கிளை நிர்வாகிகள் ராமமூர்த்தி, ஏழுமலை, விஜயக்குமார், சங்கீதா சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். கடலுார் (கி) மாவட்ட செயலாளர் ராமலிங்கம் பொது மக்கள் பயன் பெரும் வகையில் 330 மாங்கன்றுகளை வழங்கினார்.தலைமை கழக பேச்சாளர் ராசாராம், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன், செயலாளர் பழனிவேல், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், கடலுார் நகர அவைத்தலைவர் வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினர். ஒன்றிய நிர்வாகிகள்.ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருபாசங்கர் நன்றி கூறினார்.