உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ம.தி.மு.க., 31ம் ஆண்டு துவக்க விழா

ம.தி.மு.க., 31ம் ஆண்டு துவக்க விழா

வடலுார் : வடலுார் அருகே கருங்குழியில், ம.தி.மு.க. 31ம் ஆண்டு துவக்க விழா, லோக்சபா தேர்தல் வெற்றி விழா மற்றும் கொடியேற்றம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றிய தலைவர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி முரளிகிருஷ்ணன் வரவேற்றார்.கடலுார் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் கட்சி கொடியேற்றி, மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.தணிக்கை குழு உறுப்பினர் பாபு, தலைமை கழக பேச்சாளர் ராசாராமன், மாவட்ட பொருளாளர் மதன், மாவட்ட துணை செயலாளர்கள் திராவிட அரசு, மணிகண்டன், வெங்கடேசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.ஒன்றிய துணை செயலாளர் தைலம்மாள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை