உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.ஜி.ஆர்., புருஷோத்தமன் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது

எம்.ஜி.ஆர்., புருஷோத்தமன் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் பைபாஸ் சாலையில் , எம்.ஜி.ஆர்., புருஷோத்தமன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது.பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் பைபாஸ் சாலையில், எம்.ஜி.ஆர்., புருஷோத்தமன் மெட்ரிக்குலேஷன் பள்ளி புதியதாக துவங்கப்பட்டுள்ளது. பள்ளியில், ஏ.சி., வகுப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை நேற்று முதல் துவங்கியது.முதல் மாணவியாக ஆயிஷா என்றமாணவி சேர்க்கப்பட்டார். கல்வி அறக்கட்டளைத் தலைவர் மகாலட்சுமி புருஷோத்தமன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பிரியதர்ஷினி வரவேற்றார். மாணவர்கள் சேர்க்கையை பள்ளி தாளாளர் ராமலிங்கம் துவக்கி, வைத்தார்.விழாவில், பெற்றோர்கள் அக்பர் அலி, கருணாகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி