உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேரூராட்சி மாஜி செயல் அலுவலர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

பேரூராட்சி மாஜி செயல் அலுவலர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

கடலுார்: தஞ்சாவூர் முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர், தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றிய போது, கடந்த 2018-ம் ஆண்டு தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இவ்வழக்கு விசாரணை தஞ்சாவூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடக்கிறது.இவ்வழக்கு விசாரணைக்கு கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி முதல், ஸ்ரீதரன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். இதனால் அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ