உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாகவள்ளி அம்மன் பால்குட ஊர்வலம்

நாகவள்ளி அம்மன் பால்குட ஊர்வலம்

ஸ்ரீமுஷ்ணம், - ஸ்ரீமுஷ்ணம்- விருத்தாசலம் சாலையில் உள்ள பேசும் தெய்வம் நாகவள்ளி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால் குட ஊர்வலம் மற்றும் அபிேஷகம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் விருத்தாசலம் சாலையில் உள்ள பேசும் தெய்வம் நாகவள்ளி அம்மன், நாகஅங்காளபரமேஸ்வரி, பெரியாண்டவர், பாவடை ராயன் ஓம்சக்தி வேம்பாயி அம்மன், சப்த கன்னிகள், உள்ளிட்ட அம்மன் கோவில்களுக்கு பால்குடம் எடுத்தல் விழா நடந்தது. விழாவில் பக்தர்கள் நித்தியபுஷ்கரணி திருக்குளத்தில் இருந்து பால் குடம் எடுத்த அம்மன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் பரம்பரை தர்மகர்த்தா துரை.தியாகராஜன் மற்றும் பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி