உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய பரவனாற்றில் வரும் என்.எல்.சி., உபரி நீர்; பாசன வாய்க்காலில் திறந்துவிட கோரிக்கை

புதிய பரவனாற்றில் வரும் என்.எல்.சி., உபரி நீர்; பாசன வாய்க்காலில் திறந்துவிட கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : நெய்வேலி என்.எல்.சி., சுரங்கத்திலிருந்து புதிய பரவனாற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரை பாசனத்திற்கு பாசன வாய்க்காலில் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலுார் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் கம்மாபுரம்,வி.சாத்தப்பாடி, கத்தாழை, மும்முடிசோழகன், கரிவெட்டி, ஊ.ஆதனுார், வளையமாதேவி மேல்பாதி, வளையமாதேவி கீழ்பாதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2006 ஆண்டு முதல் 50 சதவீத நிலங்களை கையகப்படுத்தியுள்ளது.கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கம்மாபுரத்தில் துவங்கி சாத்தப்பாடி, ஊ.ஆதனுார், வளையமாதேவி ஆகிய வழியாக புதிய பரவனாறு வெட்டியுள்ளது. இந்த ஆற்றில் நெய்வேலி என்.எல்.சி., சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வாலாஜா ஏரிக்கு வந்தடைகிறது.புதிய பரவானற்றில் வரும் தண்ணீரை சிறுவரப்பூர், விளக்கப்பாடி, தட்டானோடை, அகரஆலம்பாடி, முகந்தரியங்குப்பம், சாத்தப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள பாசன வாய்க்காலில் திறந்து சாகுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதிய பரவனாற்றில் வரும் தண்ணீரை கோடைகாலங்களில் பாசன வாய்க்காலில் திறந்து விடுவதால் நிலத்தடி நீர் மட்டமும் உயரரும். எனவே விவசாயிகளின் நலன் கருதி புதிய பரவனாற்றில் வெளியேற்றப்படும் என்.எல்.சி., சுரங்க உபரி நீரை பாசன வாய்க்கால்களை துார்வாரி திறந்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ