உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி

ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி

கடலுார்: கடலுார் அடுத்த எம்.பி.,அகரம் கிராமத்தில் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைப்பது மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.மத்திய திட்டம் வேளாண் துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ஞானப்பிரகாசம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் சாகுபடி செய்தால் விவசாயிகள் அதிக வருமானம் பெற முடியும்.இயற்கை முறையில் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வேளாண் உழவர் நலத்துறை அளித்து வருவது குறித்து விளக்கம் அளித்தனர்.கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.வேளாண் உதவி இயக்குநர்கள் ஜானகிராமன், கதிரேசன், சுரேஷ், கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலைய பொற்கொடி, மண் ஆய்வுக்கூட வேளாண் அலுவலர் மாலினி, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் அருள் கணேஷ், வேளாண் விற்பனை மற்றும் வணித்துறை அகிலா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ