உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மோதி முதியவர் படுகாயம்

பைக் மோதி முதியவர் படுகாயம்

குள்ளஞ்சாவடி : பைக் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் படுகாயமடைந்தார்குள்ளஞ்சாவடி அடுத்த, கிருஷ்ணன்குப்பம், நாயுடு தெருவை சேர்ந்தவர் பாஷ்யம், 65. இவர் நேற்று முன்தினம், குள்ளஞ்சாவடி சத்திரம் சாலையில் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வேகமாக வந்த பைக் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த முதியவர் பாஷ்யம் கடலுார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ