| ADDED : ஜூன் 02, 2024 05:40 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் மேட்டுக் காலனியை சேர்ந்தவர் நாராயணன், 29; அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண், 23. இவர் நேற்று முன்தினம் நாராயணன் மனைவியை கிண்டல் செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட நாராயணனை, அருண் திட்டி சரமாரியாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார்.காயமடைந்த நாராயணன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, அருணை கைது செய்தனர்.